Solex குழுமத்தின் 'Unico' நீர்ப் பம்பிகள் 15 வருட வர்த்தகத்தை கொண்டாடுகிறது

Solex குழுமத்தின் 'Unico' நீர்ப் பம்பிகள் 15 வருட வர்த்தகத்தை கொண்டாடுகிறது-“Unico” Water Pumps by Solex Group Celebrates 15 Years in Business

40 ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் ஒரு புதிய உற்பத்தியாளர் ஒருவரை ஏற்றுக் கொள்வதில் இலங்கையிலுள்ள நீர்ப் பம்பி நுகர்வோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். வீட்டுப் பாவனை முதல், விவசாயம், தொழில்துறைகள் உள்ளிட்ட அனைத்து நீர்த் தொகுதி துறைகளுக்குமான நீர்ப் பம்பிகளுக்கான நாமமாக 'Solex' எனும் புதிய வர்த்தக நாமத்தைத் அவர்கள் தேர்ந்தெடுத்தனர். கடந்த 40 ஆண்டுகளில், Solex பல இலங்கையர்களின் இதயங்களை வென்றுள்ளதுடன், இலங்கையில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவில் விற்பனையாகும் நீர்ப்பம்பியாகவும் அது தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.

சந்தையில் உள்ள ஏனைய நீர்ப் பம்பி இறக்குமதியாளர்களிடையே, பணத்திற்கான பெறுமதியை வழங்கும் நீர்ப் பம்பிகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் தனது தரக்குறியீட்டின் மற்றுமொரு அங்கமாக, Solex குழுமமானது அதன் புதிய உறுப்பினரான 'Unico Water Pumps' எனும் பெயரிலான நீர்ப் பம்பியை 2005 இல் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியது. Unico நீர்ப் பம்பிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், நிறுவனம் தனது தரக்குறியீட்டினை இலங்கை நுகர்வோரிடையே பாரிய அளவில் விரிவாக்க முடிந்ததுடன், அது ஒரு மகத்தான வெற்றியையும் நிலைநாட்டியது. ஆரம்பம் முதல், சந்தையில் ஏற்கனவே உள்ள இறக்குமதியாளர்களிடையே வெற்றிபெறும் வகையில் நுகர்வோருக்கு போட்டித் தன்மையான விலையில் உயர்ந்த மற்றும் தரமான தயாரிப்பை வழங்குவதே Solex குடும்பத்தின் கீழ் ஒரு புதிய தரக்குறியீட்டை வழங்குவதன் குறிக்கோளாக இருந்தது.

பொதுவான நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நீர்ப் பம்பி துறையில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிலைப்பை வலுப்படுத்தும் வகையிலும், உபாலி விஜயசிறி (தலைவர்) மற்றும் அவரது மனைவி திருமதி மஞ்சுளா விஜயசிறி (பிரதித் தலைவர்/ பணிப்பாளர் செயற்பாடுகள்) ஆகியோரால் Unico எண்ணக்கருவானது அறிமுகப்படுத்தப்பட்டது.

Unico பம்பிகளை அறிமுகப்படுத்தி 15ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது தொடர்பில் அதன் பிரதித் தலைவர்/ பணிப்பாளர் செயல்பாடுகள் திருமதி மஞ்சுளா விஜயசிறி கருத்து வெளியிடுகையில், “நாம் எமது மதிப்புமிக்க நுகர்வோருக்கு உயர் தரமான மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். கடந்த தசாப்தத்தில் இலங்கைச் சந்தையில் Unico படிப்படியாக அதன் நிலைப்பை வலுப்படுத்தியுள்ளதுடன், இத்தரக்குறியீடானது அதன் தயாரிப்புகளின் எண்ணிக்கையை அதிக அளவில் விரிவுபடுத்தியுள்ளது. தற்போது, ​​Unico வீட்டு பாவனைக்கான பம்பிகளின் வரிசை 0.5 HP - 2 HP ஆக காணப்படுகின்றது. அத்துடன் Submersible மற்றும் Tube Well பம்பிகளையும் அது தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. Unico வின் பயணத்தை மிகவும் வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றியமைத்த Solex குழுவினருக்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். Solex மற்றும் Unico ஆகிய இரு தரக்குறியீடுகள் தொடர்பிலும் மேலும் பல ஆண்டுகளை நோக்கி நாம் கடினமாக உழைப்போம்." என அவர் தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளில், Unico உள்ளூர் நுகர்வோருக்கு அதன் உயர் தர வீட்டுப்பாவனை, submersible மற்றும் ஆழ் துளைக் கிணறு பம்பிகளை வழங்கி வந்துள்ளதன் மூலம் தொடர்ந்தும் வலிமை அடைந்துள்ளது.

Unico ஆனது, சிறந்த தயாரிப்புத் தரம் மற்றும் விற்பனைக்குப் பின்னரான அர்ப்பணிப்புடனான சேவை காரணமாக, உள்நாட்டிலுள்ள ஹார்ட்வயார்கள் மற்றும் விற்பனையாளர்களினால் ஊக்குவிக்கப்படுதில் ஆர்வம் கொண்ட தரக்குறியீடாக அவர்களின் அபிமானத்தை வென்றுள்ளது. Unico பம்பிகளை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கானது, கணேமுல்லவில் அமைந்துள்ள பாரிய தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெறுகின்றது. அங்கு பொறியியலாளர்கள் குழு தலைமையிலான அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மூலம், Unico பம்பிகளின் நிறுவலானது, மிக உயர்ந்த சர்வதேச தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. Unico பம்பிகள் தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னணி ஹார்ட்வயார்களில் கிடைக்கின்றன. மேலதிக தகவலுக்கு: www.solex.lk எனும் இணையத்தைப் பார்வையிடவும்.


Add new comment

Or log in with...