போதைப்பொருள் கடத்தல் பிரபலம் 'சன்ஷைன் சுத்தா' சூட்டில் பலி

போதைப்பொருள் கடத்தல் பிரபலம் 'சன்ஷைன் சுத்தா' சூட்டில் பலி-Sunshine Sudda Shot Dead by Unidentified Gunmen

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பிரபல குற்றவாளியான 'சன்ஷைன் சுத்தா' என அழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (03) பிற்பகல் மாத்தறை, கொட்டாவில - வரகாபிட்டிய பிரதேசத்தில் சொகுசு வாகனமொன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...