தென்னாபிரிக்க வைரஸ் நாட்டிற்குள் புகும் சாத்தியம்

டொக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

தென் ஆபிரிக்காவில் பரவும் கொரோனா பிறழ்வு, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று (01) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவில் இதற்கு முன்னர் பரவிய வைரஸ், நாட்டுக்குள் ஏற்கனவே பரவியிருந்ததாகவும் அவர் கூறினார். நாட்டுக்குள் எந்தவொரு வைரஸ் பிரவேசிப்பதையும், தடுத்து நிறுத்த முடியாதென அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், பரவுகின்ற வைரஸை, முன்கூட்டியே அடையாளம் கண்டுகொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதாலேயே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லையென அவர் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...