தொழில் அதிபராக புதிய அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷ்!

Keerthi Suresh As a Business Women-Cinema

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் 'பூமித்ரா' எனும் நிறுவனத்தை துவங்கியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமாவில் இருந்து கொண்டே தற்போது வியாபார நிறுவனம் ஒன்றை துவங்கிவிட்டார். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை தான் தனது நிறுவனம் மூலம் செய்ய இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம் இன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில்முனைவோர்களான ஷில்பா செட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சுத்தமான மற்றும் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் 'பூமித்ரா' என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான பிராண்டா இருப்பதாகவும், மேலும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை ஊக்குவிப்பதாகவும், இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கான நுகர்வோரின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டும் இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தனது இந்த புதிய பயணத்தை பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும் போது, ஒரு குழந்தையாக, என் பாட்டி முதலான பெண்கள் அவர்களின் அழகை பராமரிக்க இயற்கை பொருட்களை நம்பியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன், அது இன்றுவரை என் மனதில் பசுமையாக இருக்கிறது. பண்டைய இயற்கை பொருட்களின் செயல்திறன் எனது தோலுக்கு முழுமையான மற்றும் நீடித்த நன்மைகளை மட்டுமே வழங்கியது. பூமித்ரா மூலம், இயற்கையான தோல் பராமரிப்பின் இந்த நன்மையை அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு தோல் வகைக்கும் தனித்த்னமை மிக்க தயாரிப்புகள் கொண்டு அழகை பராமரிக்கலாம்.


Add new comment

Or log in with...