பொதுஜன பெரமுன எம்.பி. அசங்க நவரத்னவுக்கு கொவிட் தொற்று

பொதுஜன பெரமுன எம்.பி. அசங்க நவரத்னவுக்கு கொவிட் தொற்று-Kurunegala District SLPP MP Assanka Navarathne Tested Positive for COVID-19

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

தன்னுடன் அண்மையில் நேரடித் தொடர்பு கொண்டிருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அவர் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக இருந்த அசங்க நவரத்னவின் இடத்திற்கு, எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் (26) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் இந்நியமனம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...