இன்று 2.3 மில்லியன் Sinopharm; ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

இன்று 2.3 மில்லியன் Sinopharm; ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன-23 Lakhs Sinopharm & 1 Lakhs Pfizer Arrived Today

- 3 இலட்சம் டோஸ் தடுப்பூசி பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு
- இது வரை சீனாவிடமிருந்து 18 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள்

இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவுக்காக கோரப்பட்ட மேலும் 2 மில்லியன் Sinopharm கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் மற்றும் இலங்கை பாதுகாப்பு படையினருக்காக சீன தேசிய பாதுகாப்பு அமைச்சினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் டோஸ்கள் உள்ளிட்ட 2.3 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இன்று (28) காலை இலங்கையை வந்தடைந்தன.

இலங்கை பாதுகாப்பு படைவீரர்களுக்கு வழங்குவதற்காக சீனா அன்பளிப்பாக வழங்கிய 300,000 டோஸ் Sinopharm தடுப்பூசி டோஸ்களை இலங்கைக்கான சீன தூதகரத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

 

இதேவேளை COVAX இலவச தடுப்பூசி பகிர்ந்தளிப்பு வசதியின் ஊடாக அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையளிக்கும் 100,000 இற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று இலங்கையை வந்தடைந்ததாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

 

 

எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த குறித்த தடுப்பூசி டோஸ்கள், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சீனாவிடமிருந்து இலவசமாக 3 மில்லியன் டோஸ்கள் உள்ளிட்ட 18 மில்லியன்  (1.8 கோடி) Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொத்த Sinopharm தடுப்பூசி டோஸ்கள் - 18 மில்லியன்
இலவசமாக கிடைத்தவை (3 மில்.)

 • மார்ச் 31 - 600,000 (0.6 மில்.)
 • மே 25 - 500,000 (0.5 மில்.)
 • ஜூலை 27 - 1,600,000 (1.6 மில்.)
 • ஓகஸ்ட் 28 - 0.3

கொள்வனவு செய்யப்பட்டவை (15 மில்.)

 • ஜூன் 06 - ஒரு மில்லியன்
 • ஜூன் 09 - ஒரு மில்லியன்
 • ஜூலை 02 - ஒரு மில்லியன்
 • ஜூலை 04 - ஒரு மில்லியன்
 • ஜூலை 11 - 2 மில்லியன்
 • ஜூலை 11 - 2 மில்லியன்
 • ஓகஸ்ட் 06 - 2.14 மில்லியன்
 • ஓகஸ்ட் 08 - 1.86 மில்லியன்
 • ஓகஸ்ட் 24 - 1 மில்லியன்
 • ஓகஸ்ட் 28 - 2 மில்லியன்

Add new comment

Or log in with...