கொரோனா பாதிப்புகள் குறித்து போலி தரவுகள் வெளியிடப்படவில்லை

சுகாதார அமைச்சர் முற்றாக மறுப்பு

சுகாதார அமைச்சினால் எந்த சந்தர்ப்பத்திலும் போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சில தொழிநுட்ப பிரச்சினை மற்றும் கால தாமதம் காரணமாக ஏற்படும் சிறு மாற்றங்கள் தொடர்பில் சிலர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலருடன் நேற்று முன்தினம்(26) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, தொற்றா நோய்களுக்கு சிகிச்சைப் பெற்று வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாவும், அவர்கள் அனைவருக்கும் விரைவில் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...