அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு

 

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் செப்டெம்பர் 06ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதையடுத்து, இக் காலத்தில் அனைத்து ஏற்றுமதி துறை மற்றும் ஆடை தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில்  அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகள், மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தவிர, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...