வௌிநாடு செல்வோருக்கு வசதியாக ஸ்மார்ட் கொவிட் தடுப்பூசி சான்றிதழ்

வௌிநாடு செல்வோருக்கு வசதியாக ஸ்மார்ட் கொவிட் தடுப்பூசி சான்றிதழ்-Smart Vaccination Certificate-ONOLY for Foreign Travels

வெளிநாடு செல்வோருக்கு வசதியாக ஒன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, covid-19.health.gov.lk/certificate எனும் இணையத்தள இணைப்பின் ஊடாக சென்று, தங்களது விபரங்களை வழங்கி, குறித்த சான்றிதழை பெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA இனால் குறித்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தளத்தில் விண்ணப்பதாரி தனது பெயர், முகவரி, கடவுச்சீட்டு இலக்கம், வெளிநாடு செல்லும் திகதி உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும்.

அத்துடன், கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, தடுப்பூசி செலுத்திய அட்டை, வெளிநாடு செல்வது தொடர்பான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தையும் இணைக்க வேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

வௌிநாடு செல்வோருக்கு வசதியாக ஸ்மார்ட் கொவிட் தடுப்பூசி சான்றிதழ்-Smart Vaccination Certificate-ONOLY for Foreign Travels


Add new comment

Or log in with...