பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் ஓகஸ்ட் 28, 29 திறப்பு

பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் ஓகஸ்ட் 28, 29 திறப்பு-Island Wide Economic Centres Open on Aug 28-29-Shashindra Rajapaksa

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் 28, 29ஆம் திகதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த இரு தினங்களிலும் மொத்த விற்பனைக்காக மாத்திரம் இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களை பேணி அனுமதி வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலான கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கும், மொத்த விற்பனையாளர்கள் நடமாடும் விற்பனையின் பொருட்டு விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நேற்றும் (24) இன்றும் (25) திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...