இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொவிட்-19 தொற்று

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொவிட்-19 தொற்று-Janaka Wakkumbura Tested Positive for COVID19

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது மகளுக்கு மேற்கொண்ட PCR சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அவர் தனது Facebook கணக்கில் இடுகையொன்றின் மூலம் தெரிவித்திருந்ததோடு, அதனைத் தொடர்ந்து தானும் தனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட PCR முடிவின் அடிப்படையில் அவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி மாவட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான ஜானக வக்கும்புர, கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...