மேலும் ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் வந்தடைந்தன

மேலும் ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் வந்தடைந்தன-One-Million-Sinopharm-Doses-of-COVID19-Vaccine-Arrived-176-Vaccination-Centers-Operating-Aug-24

- இன்று 20 மாவட்டங்களில் 176 இடங்களில் தடுப்பூசி மையங்கள்

சீனா தயாரிப்பு Sinopharm தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ் இன்று (24) காலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சீனாவின் பீஜிங்கில் இருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL 869 எனும் விசேட சரக்கு விமானம் மூலம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாலை 5.09 மணிக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்த 3 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்களை இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கையிலுள்ள, சீனத் தூதரகம் அண்மையில் அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்றையதினம் (24) ஒரு மில்லியன் டோஸ்கள் வந்தடைந்துள்ள நிலையில் மேலும் 2 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இம்மாத இறுதிக்குள் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இதுவரை சீனாவிலிருந்து பெறப்பட்ட Sinopharm தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 15.7 மில்லியனாகும்.

இதே வேளை இன்றையதினம் (24) நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் 124 மையங்களில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

PDF File: 

Add new comment

Or log in with...