- அதாவுல்லாஹ், விமல், கம்மன்பிலவின் கட்சிகள் உள்ளிட்ட 10 கட்சிகள் ஜனாதிபதியிடம் கூட்டு கோரிக்கை
- மல்வத்து மகாநாயக்க பீடம் ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை
கொவிட்-19 இனது பரவல் முன்பை விட மிக வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாகவும், மரணங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதன் காரணமாகவும், நாட்டை முழுமையாக 3 வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் 10 கட்சிகள் இணைந்து ஜனாதிபதியிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
குறித்த கோரிக்கை கடிதத்தில்,
- தேசிய காங்கிரஸ் - ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்
- அபே ஜனபல கட்சி - அத்துரலியே ரத்தன தேரர்
- ஜனநாயக இடதுசாரி முன்னணி - வாசுதேவ நாணயக்கார
- லங்கா சமசமாஜ கட்சி - திஸ்ஸ விதாரண
- தேசிய சுதந்திர முன்னணி - விமல் வீரவன்ச
- பிவிதுரு ஹெல உருமய - உதய கம்மனபில
- ஐக்கிய மக்கள் கட்சி - டிரான் அளஸ்
- ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி - பீ. வீரசிங்க
- ஶ்ரீ லங்கா மக்கள் கட்சி - அசங்க நவரத்ன
- பொறுப்புகள் தேசிய அமைப்பு - கெவிந்து குமாரதுங்க
ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டை மேலும் ஒரு வாரத்திற்கு முடக்குமாறு, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment