கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 265 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் செவிலியர்கள், வைத்தியர்கள் உள்ளடங்கலாக 265 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான கொவிட் பரிசோதனை முடிவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் மற்றும் 133 ஊழியர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 600க்கும் அதிகமானோர் தொற்றுறுதியாகி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


Add new comment

Or log in with...