மங்கள குணமடைய டலஸ் பிரார்த்தனை; அமைச்சரவை ஊடக மாநாட்டில் தெரிவிப்பு

சிறந்த தொழில்சார் ஊடகவியளார்களை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கு தேவையான திட்டங்களை முன்னெடுக்க  இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அளகப்பெரும தெரிவித்தார். முன்னாள் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாத்ய அருண புலமைப்பரிசில் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், மருத்துவர்,பொறியியலாளர் போன்று ஊடகத்துறையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாகும்.தொழில்சார் ஊடகவியலாளர்களை உருவாக்குவது எனது நோக்கங்களில் ஒன்று. மாத்ய அருண திட்டம் நிறுத்தப்பட்டதா என்பது பற்றி தெரியாது. ஊடகவியலாளர்களுடன் பேசி சிறந்த திட்டமொன்றை முன்னெடுக்க இருக்கிறேன்.

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...