பேருவளையில் 24 மணிநேர தடுப்பூசி வழங்கல்

"வளமான பேருவளை" திட்டத்தின் கீழ் பேருவளை தேர்தல் தொகுதியில் கொரோனா தடுப்பூசி பெற்றோர்களுக்கான முதலாவது தடுப்பூசி வழங்கும் ' 24 மணிநேர ' நடமாடும் சேவை இன்று (18), நாளை (19) காலை 9.00 மணி முதல் தர்கா நகர் ஸாஹிரா தேசிய பாடசாலையில் பகல் இரவாக இடம்பெறவுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் இடம்பெறவுள்ள '24 மணிநேர' நடமாடும் சேவையில் முதலாவது தடுப்பூசி பெறாதோர் தங்களது தேசிய அடையாள அட்டையை காண்பித்து முதல் டோஸை பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்படி நடமாடும் சேவையை இராணுவத்தில் பணியாற்றுகின்ற சிறப்பு வைத்தியர்கள் முன்னெடுத்து செல்வர்.

இதேவேளை, பேருவளை நகர சபை பிரதேசத்திற்குட்பட்ட மருதானை பாஸியதுந் நஸ்ரியா பாடசாலையில் வெள்ளிக்கிழமை (20), சனிக்கிழமை (21) (காலை 9.00 மணிக்கு) ஆகிய தினங்களில் '24 மணிநேர ' முதல் டோஸ் தடுப்பூசி இரவு பகல் சேவையாக இடம்பெறவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

அஜ்வத் பாஸி

 

Add new comment

Or log in with...