ஜனாதிபதியுடன் ஐ.தே.க தலைவர் ரணில் சந்திப்பு!

கொவிட் நிலவரம் குறித்து கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய முன்னாள் பிரதமர், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசியல் தலைவர்கள் முன்வைக்கலாமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்திப்புக்கான கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாதகமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

 


Add new comment

Or log in with...