கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொவிட் தொற்று

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொவிட் தொற்று-MP Gajendrakumar Ponnambalam Tested Positive for COVID19

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது மனைவி, மகளுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கோவிட் தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து மேற்கொண்ட PCR பரிசோதனைகளின் பிரகாரம் அவர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்ய்யப்பட்டது.

அதனையடுத்து அவர் தனது குடும்பத்துடன் தன்னை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

 

 

தனது உத்தியோக பூர்வ ட்விட்டர் பக்கம் மூலம் தான் தொற்றுக்குள்ளான விடயத்தை தெரியப்படுத்தியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன்னுடன் அண்மைக்காலத்தில் நேரடித்தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்திருந்த போது, இராணுவமயமாக்கலை எதிர்க்கும் தான், சுகாதார சேவைகளில் இராணுவமயமாக்கலை நியாயப்படுத்தும்  இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மாட்டேன். அது தார்மீக ரீதியில் தவறு என தெரிவித்து இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)


Add new comment

Or log in with...