மங்கள சமரவீரவுக்கும் கொவிட் தொற்று

மங்கள சமரவீரவுக்கும் கொவிட் தொற்று-Mangala Samaraweera Tested Positive for COVID19

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்ள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல் நிலை சாதாரண நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவரது வீட்டிலுள்ள ஊழியர்கள் தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில், அவரை சந்திக்க வந்தவர்களை உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Prasanna Ranaweera Tested Positive

இதேவேளை தனக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...