- செப்டெம்பர் 30 வரை அபராதம் செலுத்துவது விலக்களிப்பு
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் நாளை (12) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சந்திமா திஸாநாயக்கவினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறிப்பிட்ட காலப்பகுதியில் (ஓகஸ்ட் 31 வரை) காலாவதியாகும் வாகனங்களுக்கான வருமான உத்தரவுப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளும்போது செப்டெம்பர் 30ஆம் திகதி வரை அபராதம் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் motortraffic.wp.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் மூலமாக, வாகன வருமான உத்தரவுப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Add new comment