- மீண்டும் சுற்றுநிருபம் வெளியிட தீர்மானம்
மீண்டும் அதிகரித்துள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில் கர்ப்பிணி தாய்மார்களை அரச சேவைக்கு அழைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்றைய (05) பாராளுமன்ற அமர்வின் போதே தெரிவிக்கையில், கர்ப்பிணி தாய்மார்களை அரச சேவைக்கு அழைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் அரச ஊழியர்களை வாரத்தில் 2 நாட்களுக்கு பணிக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான சுற்றுநிருபம், அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
Add new comment