மரண வீட்டுக்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்க

 

சிறையிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மரண வீடொன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அவரது மைத்துனர் ஒருவரின் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அம் மரண வீட்டிற்கு நீதிமன்றின் விசேட அனுமதிக்கு அமைவாக அவர் கலந்துகொண்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க,சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சடலம் வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு சென்றுவந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த மரண வீட்டிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...