கொவிட் தொற்றை கட்டுப்படுத்த திமுக அரசின் நடவடிக்கை

இலங்கை அரசுக்கு சிறந்த படிப்பினை

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் அமையப்பெற்றுள்ள திமுக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்துக்கு சிறந்த படிப்பினையாகுமென பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

புதிய திமுக அரசாங்கத்தில் பழனிவேல் தியாகராஜன் என்பவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பழனிவேல் தியாகராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி . திமுக அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு அமைச்சரை கொவிட் நிலைமையை கட்டுப்படுத்த நியமிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

100 சதவீதமான நிதி ஒதுக்கீடும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தவே இடம்பெறும். தடுப்பூசிகளை அனைத்து மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே தமது இலக்காகும். அதிவேக நெடுஞ்சாலைகள், பாலங்கள், பாதைகள் அபிவிருத்தி என்பன பிற்போடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

பெற்றுக்கொள்ள முடியும். கடந்த ஒன்றரை வருடமாக கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை என்றார்.

 


Add new comment

Or log in with...