விபத்தில் 5 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் பலி

விபத்தில் 5 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் பலி-Accident-3 Dead Including 5 Month Old Baby

- குழந்தையின் தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில்

இன்று பிற்பகல் மீகொடை வட்டரெக்க சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியு ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கர வண்டியில் ஐந்து மாதக் குழந்தை, அவரது தாய் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் பயணித்துள்ள நிலையில், குறித்த குழந்தை, பாட்டி, முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தையின் தாய் பலத்த காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...