முன்மாதிரியான சமூகத் தலைவர்களை உருவாக்கும் Zam Zam புலமைப் பரிசில்

ன்மாதிரியான சமூகத் தலைவர்களை உருவாக்குவதற்கான Yoth Leaders Fellowship புலமைப் பரிசில் திட்டம் ஸம் ஸம் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் சிறந்த இளைஞர்களை நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்து பல்லின சமூக மட்டத்தில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் அவர்களுடைய பங்களிப்பினை வெளிக்கொண்டு வரவும், சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் இத்திட்டத்தின் முதல் மூன்று நாள் நிகழ்வுகள் அண்மையில் கொழும்பு மன்டரினா ஹோட்டலில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சமூக ஊடகங்கள் தொடர்பான அறிவூட்டல் மற்றும் சவால்கள், முகநூல் பாதுகாப்பு, சமூக செய்தி தொடர்பாளரின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும், இலங்கை அரசியலமைப்பு மற்றும் உரிமைகள் , சிவில் கடமைகள் ,பொறுப்புகள் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் , வாழ்க்கைத் திறன், ஒன்லைன் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இப்பயிற்சி நெறி நிகழ்வில் விரிவுரையாளராக கலாநிதி ரங்கா கலன் சூரியா(Regional Advisor for Asia, IMS-Denmark), வழக்கறிஞர்களான ஷிராஸ் நூர்தீன், ருஷ்தி ஹபீப் மற்றும் நல்லையா அசோக்பரன் மற்றும் தரிந்து ஜயவர்தன (founder of MediaLK), பிரசாத் பெரேரா(Award winning digital security consultant and strategist), முன்ஷிப் ஹூசைன் (corporate trainer and motivator) ,செனல் வன்னியாராச்சி (Director of Hashtag Generation),செனுர அபேவர்த்தன ( public policy manager of Facebook) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி யூசுப் ஹனீபா மற்றும் சில முன்னணி சமூகத் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளையும் , அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் இப்பங்கேற்பாளர்கள் தங்களுடைய எதிர்கால திட்டங்களையும் , ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிகழ்வை ஸம் ஸம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த எழுச்சியூட்டும் பயணத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்தும் புதுப்பிக்கவும், எதிர்வரும் மாதங்களில் EYLF இன் இந்த முக்கிய குழுவில் சேரவும் இது போன்ற எண்ணம் கொண்ட இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

 

சில்மியா யூசுப்...

 


Add new comment

Or log in with...