அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கிராமத்துக்கு ஒரு மைதானம்

நாடளாவிய ரீதியில் , இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்களின் "கிராமத்துக்கு ஒரு மைதானம்" எனும் தொனிப் பொருளின் கீழ் நாடுபூராகவும் ஒவ்வொரு பிரதேசத்திலும் கரப்பந்தாட்ட மைதானம் ரூபா 15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

திருகோணமலை பட்டனமும் , சூழலும் பிரதேச எல்லைக்குள் ஒதுக்கப்பட்ட ரூபா 15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டினை இப் பிரதேச சபையின் தலைவரின் ஆலோசனைக்கு அமைவாக உறுப்பினர்களின் ஏகமானதான தீர்மானத்துடன் தமிழ்,சிங்களம்,

முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பயன்பெறக் கூடியவாறு

ஆனந்தபுரி, சிங்கபுர மற்றும் வெள்ளைமணல் கிராம சேவையாளர் பிரிவில் ஒதுக்கப்பட்ட தொகையினை மூன்றாக பிரிக்கப்பட்டு மின்னொளியிலான கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மேலதிகமாக வருகின்ற தொகையினை அந்த பகுதி வட்டார உறுப்பினர்களின் பங்களிப்புடன் செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த வகையில் வெள்ளைமணல் குடாக்கரை இளைஞர் யுவதிகளின் நலன்கருதி வெள்ளைமணல் கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்படுகின்ற இடத்தினை அனைவரின் ஆலோசனைக்கு அமைவாக தி/அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு , 2021ம் ஆண்டில் அபிவிருத்தி வேலைக்காக வழங்கப்பட்ட தொகையின் பங்களிப்புடன் நடைபெறுகின்றது. இம் மின்னொளியிலான கரப்பந்தாட்ட மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை திருகோணமலை பட்டனமும் சூழலும் உப- தவிசாளர் ஏ.எல்.எம்.முகம்மட் நௌபர் (25) சென்று பார்வையிட்டார். இந் நிகழ்வில் வெள்ளைமணல் விளையாட்டு கழக உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்


Add new comment

Or log in with...