இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

போட்டி அட்டவணை

1வது ஒருநாள் போட்டி –செப்டம்பர் 2
2வது ஒருநாள் போட்டி –செப்டம்பர் 4
3வது ஒருநாள் போட்டி –செப்டம்பர் 7
1வது T20I போட்டி –செப்டம்பர் 10
2வது T20I போட்டி –செப்டம்பர் 12
3வது T20I போட்டி –செப்டம்பர் 14

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளும் தென் ஆபிரிக்க அணியின் போட்டிகளுக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் 2 ம் திகதி ஆரம்பிக்கும் தொடர்

செப்டெம்பர் 14 ம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரும் அட்டவனைப் படுத்தப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் 2,4,7 ம் திகதிகளில் ஒருநாள் தொடரும், 10 ,12 ,14 ம் திகதிகளில் ரி 20 தொடரும் இடம்பெறவுள்ளன. அத்தனை ஆட்டங்களும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

இந்தியாவுடனான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 3 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்தது , அதிலும் ரி 20 தொடரை இலங்கை அணி வென்று வரலாறு படைத்துள்ள நிலையில் அடுத்துவரும் தென் ஆபிரிக்க தொடர் ரசிகர்களால் பரவலாக எதிர்பார்க்கப்படும் தொடராக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.​


Add new comment

Or log in with...