உள்ளூராட்சித் தேர்தல் முறை எதுவானாலும் தனித்தே போட்டியிட வேண்டும்

களுத்துறை மாவட்ட செயற்குழு மனோ கணேசனிடம் கோரிக்கை

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில்ஜனநாயக மக்கள் முன்னணிதனித்தே போட்டியிட வேண்டும் என, கட்சி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் எம்பீயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில், தனித்து போட்டியிடுவதுபற்றி கட்சித் தலைமை சிந்திக்க வேண்டுமென களுத்துறை மாவட்ட செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முறைமை பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோகணேசன் சிறுபான்மையினருக்கு நியாயம் தரும் தேர்தல் முறைமைக்காக போராட வேண்டும் என்றும் தேர்தல் முறைமை எதுவாக இருந்தாலும்,எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது அவசிமென்றும் செயற்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு தெற்கு பாமன்கடை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மனோ கணேசன் எம்பி தலைமையில் களுத்துறை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மரியதாசன் அன்டனி ஜெயசீலன் ஏற்பாட்டில்  நடைபெற்ற இக்கூட்டத்தின் போது, களுத்துறை மாவட்டத்திற்கான புதிய தொகுதி, வட்டார அமைப்பாளர் உள்ளிட்ட பதவி களுக்கான நியமனங்களும் கட்சித் தலைவர் மனோ கணேசனால் வழங்கி வைக்கப்பட்டன.  இக்கூட்டத்தின்போது, தேர்தல் முறைமை எதுவாக இருந்தாலும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், களுத்துறை மாவட்டத்தில் கட்சியின் ஏணிச் சின்னத்தில் தனித்தே போட்டியிட வேண்டும் என , களுத்துறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்,கோரிக்கை விடுத்தனர்.

களுத்துறை மாவட்ட பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் எமக்குரிய பிரதிநிதித்துவங்களை பெறுவதற்கு தனித்து போட்டியிடுவதே சரியான வழி எனவும்வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில்,கட்சியின் செயற்குழுவினரால்முனவைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த தலைவர் கூறியதாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கின்ற பிரதான சிறுபான்மை கட்சி என்ற முறையில் நாம் தேர்தலில் போட்டியிடும் முறைமை தொடர்பில் உரிய வேளையில்  உரிய முடிவை தமிழ் முற்போக்கு கூட்டணியாகச்செயற்பட்டு எடுப்போம். நாம் சேர்ந்தும் போட்டியிடலாம். தனித்தும் போட்டியிடலாம். சகல கதவுகளின் சாவிகளையும் எமது கையில் வைத்திருப்போம். உரிய வேளையில் உரிய கதவை திறப்போம். எவருக்கும் வாக்குகளை பெற்றுக்கொடுத்து விட்டு, வெளியிலே சும்மா நிற்கும் வாக்கு வங்கியாக நாம் இனி இருக்க மாட்டோம். எமது மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களை  பெறுவதே எமது நோக்கமாகுமென கட்சி தலைவர் மனோ கணேசன் எம்பி இக்கூட்டதில் பதில் அளித்தார். 


Add new comment

Or log in with...