விபத்து தொடர்பில் பாடகி உமாரியா சிங்ஹவன்ச பிணையில் விடுதலை (UPDATE)

விபத்து தொடர்பில் பாடகி உமாரியா சிங்ஹவன்ச கைது-Umaria Sinhawansa Arrested for Accident

விபத்துச் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்ஹவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (01) புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்க்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.


விபத்து தொடர்பில் பாடகி உமாரியா சிங்ஹவங்ச கைது

பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்ஹவன்ச விபத்துச் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (31) பிற்பகல் 5.15 மணியளவில் கொழும்பு இராஜகிரிய பாலத்தின் கீழுள்ள வீதியில் உமாரியா சென்ற வாகனம் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 38 வயதான குறித்த முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

உமாரியாவை இன்றையதினம் (01) புதுக்கடை நீதிமன்றில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். (11.08am)


Add new comment

Or log in with...