தடுப்பூசி பெற்ற பயணிகளை அனுமதிக்க பிரிட்டன் திட்டம்

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்துவிட பிரிட்டன் திட்டமிடுகிறது.

அது குறித்த அறிவிப்பை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிட வாய்ப்பிருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்தது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை தனிமைப்படுத்தாமல் நாட்டிற்குள் அனுமதிக்கலாம். அவர்களால் ஆபத்தில்லை என்று கூறி, பிரிட்டன் அமைச்சர்கள் பிரதமர் ஜோன்சனுக்கு அழுத்தம் தருவதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி அடுத்த வாரம் முதல் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையமும் அதே கோரிக்கையை விடுத்துள்ளது. பயணத்துறையை மீட்க அது அவசியம் என்று விமான நிலையம் கூறியது.


Add new comment

Or log in with...