ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று புதிய உச்சம்

ஆசிய நாடுகளில் கொவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் புதிய உச்சங்களைத் தொடுகின்றன.

தாய்லாந்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நேற்று புதிதாக 16,500 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 133 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தில் இதுவரை சுமார் 543,000 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

4,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியாவிலும் முன்னெப்போது இல்லாத அளவில் நேற்று புதிதாக 1,900 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

நான்காம் கட்ட நோய்ப்பரவலாலும் வேகமாகப் பரவும் டெல்ட்டா வகைக் கொரோனா வைரஸாலும் தென் கொரியா

தடுமாறி வருகிறது.

தலைநகர் சோலில் மட்டும் 600க்கும் அதிகமானோருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது தென் கொரியாவில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் அண்மைக்காலமாக நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.


Add new comment

Or log in with...