இறக்காமம் உதைபந்தாட்டக் கழகம் வெற்றி

ஹஜ் பெருநாளை உன்னிட்டு பாலமுனை றைஸ்டார் உதைபந்தாட்டகழகம் ஏற்பாடுசெய்த உதைப்பந்தாட்டப் போட்டி பாலமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் இப் பட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ் விளையாட்டுப் போட்டிக்கு இறக்காம ம் ஐ.ஆர்.எப்.சீ.உதைபந்தாட்டக்கழகமும் பாலமுனை றைஸ்டார் உதைபந்தாட்டக் கழகத்துக்கும் இடையில் இடம்பெற்றன.

இருஅணியினரும் மிகவும் சிறப்பாக விளையாடியதுடன் போட்டியின் முதலாவது கோலினை இறக்காம ம் ஐ.ஆர்.எப்.சீ. உதைபந்தாட்ட அணியின் சார்பில் ஏ.எஸ்.றில்வான் முதலாவது கோலினை அடித்தார் இடைவேளைக்கு முன்னர் பாலமுனை றைஸ்டார் உதைபந்தாட்ட அணியினரால் எந்தவிதமான கோலினையும் போட முடியவில்லை.

இடைவேளைக்கு பின்னரா போட்டியின்போது மீண்டும் இறக்காமம் ஐ.ஆர்.எப்.சீ.உதைப்பந்தாட்ட அணியி்ன் சார்பில் ஏ.எஸ்.றில்வான் மற்றும் எம்.எச்.பௌமி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலினை அடித்தனர் பாலமுனை றைஸ்டார் எந்த ஒரு கோல்களையும் அடிக்க முடியவில்லை என்பதால் இறக்காம ம் ஐ.ஆர்.எப்.சீ.உதைபந்தாட்ட அணியினர் (03-0) என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

(ஹிங்குறாணை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...