வங்கிக் கணக்கில் ரூ. 6 கோடி பணத்துடன் 41 வயது பெண் கைது

வங்கிக் கணக்கில் ரூ. 6 கோடி பணத்துடன் 41 வயது பெண் கைது-41 Year-Old Woman Arrested-Rs 60 Million in 5 Bank Accounts

நேற்று (28) இரவு தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் குற்றப் புலனாய்பு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

41 வயதான குறித்த பெண்ணின் பெயரிலிருந்த ஐந்து வங்கி கணக்குகளில் சுமார் ரூ. 60 மில்லியன் பணம் இருந்ததாகவும், போதைப்பொருள் விற்பனையின் அடிப்படையில் போதைப்பொருள் பயன்படுத்துவோர் மற்றும் கடத்தல்காரர்களால் குறித்த கணக்கிற்கு இவ்வாறு பணம் வைப்பிடப்பட்டுள்ளதாக, விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதி விசாரணைப் பிரிவினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, CIDயினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக குறித்த கணக்குகள் பேணப்பட்டுள்ள பண பரிவர்த்தனைகள் மூலம் இப்பணம் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் குறித்த பெண் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை CIDயினர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...