போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை  அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர். அத்துடன் சிகிச்சை நிலையங்களிலும் தொற்றாளர் நிரம்பியுள்ளதாக சுகாதார தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

எனவே சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை முன்னரைப் போன்று கடுமையாக்க வேண்டியேற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில்,

கடந்த சில வாரங்களைவிட தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெரும் எண்ணிக்கையோனோருக்கு அறிகுறிகள் தென்படுவதோடு, அவர்கள் சிக்கல் நிலைமை அதிகமுடையவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக பெருமளவானோர் ஒட்சிசன் தேவையுடையோகவுள்ளனர்.

தொற்றாளர்களை அனுமதித்து சிகிச்சையளிப்பதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த பெரும்பாலான சிகிச்சை நிலையங்கள் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிகிச்சை நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலேனும் நாட்டை முழுமையாக திறக்க முடியுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுகிறார் என்று நாம் அவதானித்தால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும்.

மாறாக அவ்வாறில்லை என்றால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தாமதம் ஏற்படும் அல்லது கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டியேற்படும் என்றார்.

சுகாதார துறையினர் எச்சரிக்கை

 


Add new comment

Or log in with...