முன்னாள் எம்.பி உபேக்‌ஷா கைதாகி பிணையில் விடுதலை

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும் முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவருமான உபேக்‌ஷா ஸ்வர்ணமாலி கைது செய்யப்பட்டு நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் செலுத்திய வாகனம் மற்றொறு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக உபேக்‌ஷா ஸ்வர்ணமாலி கைது செய்யப்பட்டார்.

உபேக்‌ஷா கண்டியிலிருந்து குருணாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் அவர் பயணித்த வாகனம் கட்டுகஸ்தோட்டை, நுகவெல பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயது இளைஞன் காயங்களுக்குள்ளாகி, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உபேக்ஷா நேற்று (26) பிற்பகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் உபேக்ஷா செலுத்திய வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் வாகன பரிசோதகர் ஒருவரினால் இந்த வாகனம் சோதனையிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எம்.ஏ.bஅமீனுல்லா


Add new comment

Or log in with...