நீர்பம்பிகள், மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

கதிரவெளி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கல்லரிப்பு விவசாய கிராமத்திற்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சுய உற்பத்தியில் ஈடுபடும் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட சுய உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களுக்கு நீர்பம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றினை சனிக்கிழமை (24) வழங்கி வைத்திருந்தார்.

அதன் பின்னர் காவியா பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோரப் பாதுகாப்பிற்கான மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வாகரை பிரதேசத்தில் உள்ள கிருமிச்சை மற்றும் மதுரம்கேணிக்குளம் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்ததுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்திருந்தார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

 

Add new comment

Or log in with...