ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணி நேர தடுப்பை தொடர்ந்து 14 நாள் விளக்கமறியல்

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணி நேர தடுப்பை தொடர்ந்து 14 நாள் விளக்கமறியல்

ரிஷாட் பதியூதீன் எம்.பியின் மனைவி உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி வரை, 14 நாட்களுக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகிய நால்வரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினம் (26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது.

அத்துடன் மரணித்த சிறுமியின் உடலை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்ற நீதிமன்றம் அதற்கான அனுமதியையும் வழங்கி உள்ளது.


Add new comment

Or log in with...