தூதரின் மகள் கடத்தல்; ஆப்கான் வெளியுறவு அமைச்சு பாக். தூதரிடம் கண்டனம்

தூதரின் மகள் கடத்தல்; ஆப்கான் வெளியுறவு அமைச்சு பாக். தூதரிடம் கண்டனம்-Abduction of Afghan Ambassador's Daughter-Afghanistan Condemned

இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டதற்கு, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சு காபூலுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கானை வரவழைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த மோசமான சம்பவம் குறித்து வெளியுறவு அமைச்சு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு கடும் எதிர்ப்பு மற்றும் ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்குமாறு ஆப்கானிஸ்தான் அமைச்சு கானை வலியுறுத்தியுள்ளது, 

"ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச சமவாயங்களுக்கு இணங்க ஆப்கானிஸ்தான் தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முழு பாதுகாப்பையும்   உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த  ஆப்கானிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயத்திற்கு  முன்னுரிமை பட்டியலில் வழங்கவும், குற்றவாளிகளைக் கைது செய்ய அவர்களின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தவும் பிரதமர் இம்ரான் கான் உள்துறை அமைச்சிடம் கேட்டுக் கொண்டதாக மன்சூர் அகமது கான் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் தூதரின் மகளை கடத்தி தாக்கியது தொடர்பாக இஸ்லாமாபாத் மீது  குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகையில், பாகிஸ்தான் உள்துறை  அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுவும் இந்த கொடூரமான சம்பவத்தை "சர்வதேச சதி" என்று கூறி பொறுப்பைத் தவிர்க்க முயன்றுள்ளார்..

கடத்தலுக்கு எதிராக ஆப்கானிய அரசாங்கம்   நேரடியான  பதில் வழங்கியுள்ள போதிலும், ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் "கடத்தப்படவில்லை" என்று பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...