கெபிட்டல் மஹாராஜா குழும தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்

கெபிட்டல் மஹாராஜா குழும தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்-Capital Maharaja Group Chairman R Rajamahendran Passed Away

கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்.

கொவிட் தொற்று தொடர்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கிளி மஹாராஜா' என அழைக்கப்படும் இவர், சக்தி, சிரச உள்ளிட்ட தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளின் தாய் நிறுவனமான கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் நிறுவுனர்களில் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகனாவார்.

கெபிட்டல் மஹாராஜா நிறுவனமானது, இலங்கை ஒளி, ஒலிபரப்புத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று என்பதுடன், ஊடகத் துறை தவிர்ந்த பல்வேறு தரப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களும் அதன் கீழுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...