Saturday, July 24, 2021 - 2:44pm
2020 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள், பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை ஜூலை 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Online மூலமான குறித்த விண்ணப்பங்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் தமது விருப்பத் தெரிவின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள பல்கலைக்கழகங்களின் வரிசையை அல்லது விண்ணப்பித்த பாடநெறிகளின் தெரிவுகளின் வரிசைகளில் மாற்றம் செய்ய அவசியமாயின், அதற்காக ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 14 வரையான இரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
Add new comment