கல்முனை சுகாதார பிரிவில் இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன்

கல்முனை பிராந்தியத்திற்கு அனுப்பப்படும் கொரோனா தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட விருப்பதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள ஏழு ஆதார வைத்தியசாலைகள், 13 பிரதேச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பாடசாலை கொரோனா தடுப்பூசி மையங்கள் மூலம் இவை வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று சனிக்கிழமை பாலூட்டும் தாய்மார், 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணித் தாய்மார் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை முதல் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்ட கொரோனா அலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட

பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் அக்கரைப்பற்று, கல்முனைப் பிரதேசங்கள் முடக்கப்பட்டன.

மூன்றாம்கட்ட அலையில் சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை ஆகியன முடக்கப்பட்டன.

தற்போது பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்று அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று அலைகளிலும் இதுவரை 63 பேர் மரணமடைந்துள்ளதோடு, இறுதியாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நற்பிட்டிமுனை தினகரன், காரைதீவு குறூப் நிருபர்கள்


Add new comment

Or log in with...