நாட்டில் 233,720 பேருக்கு தடுப்பூசிகள்

நாட்டில் நேற்று முன்தினம் வரை 233,720 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் 87,438 பேருக்கு சைனோபாம் முதலாம் தடு ப்பூசியும், 13,255 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியும் நேற்றுமுன்தினம்(22) செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் சைனோபாம் முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,879,213 ஆக அதிகரித்துள்ளது. சைனோபாம் இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,35,965 ஆக உயர்வடைந்துள்ளது.

16,628 பேருக்கு நேற்றுமுன்தினம் பைஸர் முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதற்கமைய, பைஸர் முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 112,750 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், 116,399 பேருக்கு மொடர்னா முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

இதன்படி, மொடர்னா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 466,247 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...