விசாரணையை துரிதப்படுத்தி நீதியை நிலைநாட்ட வலியுறுத்து

ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை வெளியீடு

 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி பற்றிய விசாரணைகள் விரைந்து நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் துரிதப்படுத்தி...

அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை சிலர் அரசியல்மயப்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்கு இடமளிக்காத வகையில் தரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...