அரசு நிர்ணயிக்கும் விலையில் நெல் கொள்வனவுக்கு ஆலை உரிமையாளர்கள் இணக்கம்

அரசு நிர்ணயிக்கும் விலையில் நெல் கொள்வனவுக்கு ஆலை உரிமையாளர்கள் இணக்கம்-Mill Owners Agreed to Purchase Paddy in Government's Guranteed Price

அரசாங்கம் நிர்ணயிக்கும் உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்ய, நாட்டின் அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம் (21) விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற  கலந்துரையாடலில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் ஒரு கிலோ நாட்டு நெல் ரூ. 50, ஒரு கிலோ சம்பா நெல் ரூ. 52 இற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் ரூ. 55 எனும் உத்தரவாத விலை நெல்லை கொள்வனவு செய்ய விலை நிர்ணணம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 05ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சரவை இம்முடிவை எடுத்திருந்தது.

இதேவேளை, இம்முறை சிறுபோகச் செய்கையில் 1,500,000 மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென அரசாங்கம் மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...