வேலைப் பழு மிக்க பெண்களின் கூந்தலை புத்துயிரூட்ட புதிய Kumarika Therapy அறிமுகம்

வேலைப் பழு மிக்க பெண்களின் கூந்தலை புத்துயிரூட்ட புதிய Kumarika Therapy அறிமுகம்-Sri Lanka’s No. 01 Hair Oil Brand Kumarika Introduces New Therapy Range

தற்போது நிதமும் வேலைப்பளுவுடன் காணப்படும் பெண்களின் கூந்தல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாக அன்றாடம் வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு இது அதிகளவில் காணபப்டுகின்றது. எந்நேரமும் வேலையில் திழைத்திருப்பதால், கூந்தல் பராமரிப்பில் கவனம் செலுத்த போதுமான நேரம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இலங்கையின் முதற்தர கூந்தல் பராமரிப்பு தரக்குறியீடான் குமாரிகா, நுகர்வோரின் மாறிவரும் தேவைகளை உண்மையாக புரிந்துகொள்ளும் ஒரு வர்த்தகநாமமாக இருப்பதால், வேலைப்பளுவுடன் உள்ள பெண்கள் அனைவருக்கும் அவர்களின் கூந்தல் ஆரோக்கியத்தின் நீடித்து நிலைப்பிற்காக சிறந்த தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய Kumarika Therapy (குமாரிகா தெரபி) கூந்தல் பராமரிப்பு தீர்வின் அறிமுகத்தின் மூலம் தற்காலபெண்களின் விரைவான வாழ்க்கை முறைகளுடனான தேவைகள்  பூர்த்தி செய்யப்படுகிறது.

குளியலுக்கு முன்னதான சிகிச்சை முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தெரபி எண்ணெய், பெண் ஒருவரின் பெறுமதிமிக்க நேரத்தை விரயமாக்காது 20 நிமிடங்களுக்குள் அமையும் வகையிலான சிகிச்சையை வழங்குகிறது. எனவே அவர் குளித்த உடனேயே தனது அன்றாட பணிகளுக்கு திரும்ப முடியும். பாரம்பரிய கூந்தல் எண்ணெய்களைப் போலன்றி, பல மணிநேரங்களுக்கு வைக்க வேண்டிய தேவை இதில் கிடையாது. இப்புதிய சிகிச்சையளிக்கும் எண்ணெயை பயன்படுத்துவது ஒரு எளிய செயன்முறையாகும். இது கொண்டிருக்கும் புத்தாக்கமான சீப்புக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்த சீப்பு மூலம், தலை முடியின் ஆழம் வரை எண்ணெயை வசதியாகப் பயன்படுத்தலாம், அதன் பிறகு, செய்ய வேண்டியதெல்லாம், தலையை விரல் நுனியினால் மெதுவாக மசாஜ் செய்வது, பின் குளிக்கும் முன், 20 நிமிடங்கள் அதனை நன்றாக ஊற விடுவது. வெறுமனே 20 நிமிட செயன்முறையே இதற்கு எடுத்துக் கொள்வதால், தொழிலில் ஈடுபடும் அல்லது வீட்டு வேலையில் ஈடுபடும் எந்தவொரு பெண்ணும் வாரத்தில் குறைந்தபட்சம் 2-3 தடவைகள் இந்த சிகிச்சையை எளிதாக மேற்கொள்ள முடியும்.

இந்த கூந்தல் சிகிச்சை எண்ணெயானது 100% தாவர அடிப்படையிலான பொருட்களிலிருந்து பெறப்பட்ட ஐந்து முக்கிய இயற்கை மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து பொருட்களின் இந்த தனித்துவமான கலவை: தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், அர்கான் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், செவ்வரத்தை எண்ணெய் ஆகியவற்றினால் ஆக்கப்பட்டது. இவை பெண்களின் கூந்தலுக்கு 100% ஊட்டச்சத்தை அளிக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன. தூய தேங்காய் எண்ணெயைப் பொறுத்தவரை, அது கூந்தலை புரத இழப்பிலிருந்து பாதுகாக்க உதவுவதுடன், முடி உடைவதைக் குறைத்து, முடியை ஈரப்பதமாக்கி, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. அத்துடன் தூசி, புகை, சூரிய ஒளி போன்ற வெளிப்புற காரணிகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. மக்னீசியம் உட்செலுத்தப்பட்ட பாதாம் எண்ணெயானது, கூந்தலை மென்மையாக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. இது அதிகளவான விட்டமின் E இனை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சேதமடைந்த மயிர்க்கால்களை அமு சரிசெய்வதுடன், உச்சந்தலையில் திசுக்களை உருவாக்குகிறது, அத்துடன் உச்சந்தலையில் அழற்சியைத் தணிக்கிறது. அர்கான் எண்ணெய் ஒரு சிறந்த ஈரப்பதனாக்கியாகும். கூந்தல் மற்றும் உச்சந்தலையை ஆழமாக ஈரப்பதனுடன் வைத்திருக்க உதவுவதுடன், பிளவு முனைகள் ஏற்படுவதை தடுத்து, முடி உடைவதையும் குறைத்து, உச்சந்தலையை ஆரோக்கியமாக பேணி, முடி உதிர்வதைத் தடுக்கின்றது. ஒமேகா-6 கொழுப்பமிலங்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய், முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், முடியை ஈரப்பதனாக பேணுகிறது. கூந்தலுக்கு நெகிழ்வுத்தன்மை, மென்மை, பிரகாசத்தை அதிகரிக்கச் செய்கிறது. சேதமடைந்த முடியை சரிசெய்வதற்கான கெரட்டினை உருவாக்கவும், முடியின் நிறத்தை பராமரிக்கவும், முடியை அடர்த்தியாகவும், முடி உதிர்தலைக் குறைக்கவும் செவ்வரத்தை மலர்கள் உதவுகின்றன. இந்த ஐந்து பொருட்களும் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ள, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள மூலப்பொருட்களாகும்.

குமாரிகா தெரபி கூந்தல் எண்ணெய், இலங்கை பெண்கள் எதிர்கொள்ளும் ஐந்து மிக முக்கியமான கூந்தல் பராமரிப்பு பிரச்சினைகளான, உலர்ந்த உச்சந்தலை, முடி உடைதல், கரடுமுரடான முடி, பிளவு முனைகள் என்பவற்றுடன் மன அழுத்தம், தூக்கமின்மை, கூந்தலை அழகுபடுத்தும் உபகரணங்களின் அதிகளவான பாவனை போன்ற பொதுவான காரணிகளால் ஏற்படும் முடி நிறமாற்றம் மற்றும் வெப்பம், தூசி, காலநிலை மாற்றம் போன்ற வெளிப்புற காரணிகள் மூலமான பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்கிறது.

உண்மையான இலங்கை தரக்குறியீடான குமாரிகா, இலங்கை பெண்களின் கூந்தல் பராமரிப்பு தேவைகளை கட்டுப்படியான விலை, உயர்தர கூந்தல் பராமரிப்பு தீர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அனைத்து இலங்கை பெண்களும் பெற முடியுமான வகையில் உறுதி செய்து வழங்குகிறது. புதிய குமாரிகா தெரபி, 100% இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டு, கூந்தல் பராமரிப்பு சிகிச்சைகளுக்காக பிரத்தியேகமாக உற்பத்தி செய்யப்பட்டு, 70 மில்லி லீற்றர் போத்தலுக்கு ரூ. 300 எனும் கட்டுப்படியான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.


Add new comment

Or log in with...