ரூ. 103 மில்லியன் மதிப்புள்ள 344 கிலோ கஞ்சாவுடன் வட கடலில் மூவர் கைது!

ரூ. 103 மில்லியன் மதிப்புள்ள 344 கிலோ கஞ்சாவுடன் வட கடலில் மூவர் கைது!-Navy Seizes Over Rs 103 Million Worth Kerala Cannabis-3 Arrested

இன்று (12) காலை அனலைதீவு பகுதியில் 344 கிலோ 560 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவது,

இந்தியாவில் இருந்து கடல்வழிப்பாதை மூலமாக கஞ்சா கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, யாழ்ப்பாணம், அனலைதீவை அண்டிய  கடற் பகுதியில் கடற்படையினரால் மேற்கொளாளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 344 கிலோ 560 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகளுடன் மூவர், காங்கேசன்துறை கடலில் வைத்து கைது செய்யப்பட்டுளள்ளனர்.

ரூ. 103 மில்லியன் மதிப்புள்ள 344 கிலோ கஞ்சாவுடன் வட கடலில் மூவர் கைது!-Navy Seizes Over Rs 103 Million Worth Kerala Cannabis-3 Arrested

இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த படகில் 11 பொலித்தீன் பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34, 38 வயதுடைய யாழ்ப்பாணம் - குருநகர், நாச்சிக்குடா, மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

ரூ. 103 மில்லியன் மதிப்புள்ள 344 கிலோ கஞ்சாவுடன் வட கடலில் மூவர் கைது!-Navy Seizes Over Rs 103 Million Worth Kerala Cannabis-3 Arrested

டிங்கி படகுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

Add new comment

Or log in with...