இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு செல்ல அமீரக மக்களுக்கு 21 நாட்கள் தடை

இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு செல்ல அமீரக மக்களுக்கு 21 நாட்கள் தடை-UAE Temporarily Ban It's Citizen to Travel 14 Countries Including Sri Lanka

இலங்கை, உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அந்நாட்டு மக்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

கொவிட்-19 புதிய திரிபுகளின் பரவலின் அடிப்படையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், வியட்நாம், நமீபியா, சம்பியா, கொங்கோ, உகண்டா, சிரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா ஆகிய 14 நாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி வரையிலான 3 வாரங்களுக்கு குறித்த தடை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இலங்கை உள்ளிட்ட குறித்த நாடுகளுக்கான விமான சேவைகளும் ஜூலை 21 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...