விஜய்யை ஜேம்ஸ் போண்டாக்க விரும்பும் பிரபல இயக்குனர்

நடிகர்  விஜய்யுடன் இணைந்து ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான ஒரு படத்தை உருவாக்க  விரும்புவதாக இயக்குனர் மிஷ்கின் ட்விட்டர் ஸ்பேஸ் உரையாடல் நிகழ்ச்சியில்  தெரிவித்துள்ளார் தமிழ்  சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய்யின் பிறந்தநாள்   விமர்சையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள்  என கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  திகழும் நடிகர் விஜய்யின் , 47வது பிறந்த தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள்,  திரையுலக பிரபலங்கள் என பலரும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்தனர்.

சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில்  வலம் வரும் நடிகர் விஜய்யின் 47வது பிறந்ததினம் விமர்சையாக  கொண்டாடப்பட்டது. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், அம்ரிதா  உள்ளிட்ட பலரும் விஜய் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களையே மிஞ்சும் அளவிற்கு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில்  ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேஸ் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  இயக்குனர் மிஷ்கினிடம் நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா? அவ்வாறு  இயக்கினால் அவருக்கு எந்த கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் என ரசிகர்  ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மிஷ்கின்,  ஜேம்ஸ்பாண்டு மாதிரியான ஒரு படத்தை விஜய்யுடன் இணைந்து உருவாக்க  விரும்புவதாக தெரிவித்தார். மேலும் தமிழ் சினிமாவில் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க  தளபதி விஜய் கரெக்டா இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...