'தீவிரச் சிந்தனைப்போக்கு கொண்டவர் இப்ராஹிம் ​ரைசி'

இப்ராஹிம் ​​ரைசிக்கு (Ebrahim Raisi) உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துக் கூறிவரும் வேளையில், இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஜனாதிபதியானவர்களிலேயே ஆகத் தீவிரச் சிந்தனைப்போக்கு கொண்டவர் அவர்தான் என்று இஸ்ரேல் வர்ணித்துள்ளது.

சட்ட நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு 30,000க்கு அதிகமானோருக்கு மரண தண்டனை விதித்ததில் ரைசிக்குப் பங்கிருப்பதாக இஸ்ரேல் சாடியது.

ஈரானின் அணுவாயுத முயற்சிகளைத் துரிதமாகத் தொடர்வதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் இஸ்ரேல் கூறியது.

இதற்கிடையே, சுதந்திரமான, நியாயமான செயல்பாட்டின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாய்ப்பு ஈரானியர்களுக்கு மறுக்கப்பட்டது வருத்தமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுவாயு முயற்சிகள் தொடர்பில், தெஹ்ரானுடனான (Tehran) மறைமுகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டிருப்பதாக வாஷிங்டன் (Washington) கூறியுள்ளது.


Add new comment

Or log in with...