‘CNCI சாதனையாளர் விருதுகள் 2020’: 2 விருதுகளை வசப்படுத்திய Pelwatte

இலங்கையில் பாலுற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Pelwatte Dairy Industries, இலங்கை தேசிய கைத்தொழில்கள் சம்மேளனம் (Ceylon National Chamber of Industries - CNCI) இன் 2020ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் இரு வெவ்வேறு பிரிவுகளில் இரண்டு விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்த விருது வழங்கும் நிகழ்வானது கொழும்பு கலதாரி ஹோட்டலில், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. பாரிய நிறுவனங்களுக்கான பிரிவில் தேசிய ரீதியிலான கைத்தொழில் துறைக்கான மெரிட் விருதினையும், அதே பிரிவில் மாகாண ரீதியிலான கைத்தொழில் துறைக்கான இணை வெண்கல விருதினையும் Pelwatte வென்றிருந்தது.

CNCI சாதனையாளர் விருதுகள், முன்னைய ஆண்டில் பல்வேறு துறைகளில் கைத்தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு விரிவாக பங்களிப்பு செய்த தொழிலதிபர்களை அடையாளம் கண்டு விருது வழங்குகின்றது. உலகளாவிய தொற்றுநோயின் விளைவுகள் காரணமாக சவால்களுக்கு மத்தியிலும், கடந்த நிதியாண்டில் பொருளாதாரத்திற்கு பெறுமதி சேர்த்த அதேவேளை நெகிழ்ச்சித் தன்மையுடன் நீடித்த நிறுவனங்களை இந்த ஆண்டின் நிகழ்வு பிரதானமாக அங்கீகரித்தது.

Pelwatte Dairy இன் பொதுமுகாமையாளர், லக்சிரி அமரதுங்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இந்த விருதுகள் மற்றும் பாராட்டுக்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் எங்கள் குழு தொடர்ந்து அளித்த பங்களிப்புக்கு இது ஒரு சான்றாகும்.

தொழில், நாடு மற்றும் குறிப்பாக மக்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை உருவாக்க எம்மால் முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இது இணையற்ற தரம் மற்றும் தயாரிப்பு ஆகிய எமது பெறுமானங்களுக்கு உண்மையாக இருக்கும் அதேவேளை நாட்டில் ஒரு முழுமையான தன்னிறைவான பாலுற்பத்தித்துறையை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்கு பார்வையின் பிரதிபலிப்பாகும்,” எனக் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...